பழனிக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள புதூரை சேர்ந்தவர் கணேசன். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக குழுவினருடன் கொடைரோடு அருகே சென்று கொண்டிருக்கும்போது நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் மற்றும் உடனிருந்த ஆதவன், தினேஷ்குமார், தங்கராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அதன்பின் அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் கணேசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.