ஏப்ரல் மாதத்தில் 4 முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன், கார்த்தி நடிக்கும் சுல்தான், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார், சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படங்களை ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளனர். திரையரங்குகளில் ஒப்பந்த போட்டியைத் தவிர்க்க ஒவ்வொரு வார இடைவெளியில் ஒரு படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.