Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரபரப்பு….! இன்று சசிகலா விடுதலை… எதிர்பார்ப்பில் கழகத்தினர் …!!

இன்று காலை சரியாக 10 மணிக்கு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய சசிகலா விடுதலை செய்யப்பட இருக்கின்றார்.

பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலையிலிருந்து உதவி கண்காணிப்பாளர் லதா கோப்புகளை கொண்டு வந்து நேரடியாக விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய சசிகலாவிடம் கையொப்பம் வாங்கி சிறைத் துறையின் ஆவணங்கள், கோப்புகளில் கையெழுத்து வாங்குகின்றார். அதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கக் கூடிய சசிகலாவின் உடைமைகள் அவருடைய உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

விடுதலைக்குப் பிறகும் கூட நாளை முதல் தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலே இன்னும் சில நாட்களுக்கு சசிகலா சிகிச்சை பெறுவார் என தெரிகின்றது. மருத்துவமனை நிர்வாகம் தான் அவர் எப்போது டிச்சார்ஜ் செய்யப்படுவார் என முழுமையான முடிவெடுக்க முடியும். தொடர்ந்து அவருக்கு இன்று மாலை மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் இன்று மாலைக்குள் அவர் எப்போது சென்னை திரும்புவார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |