சசிகலாவை வரவேற்கும் விதமாக நெல்லையில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, கேடிசி நகர், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதிமுகவை வழிநடத்த வருகைதரும் பொதுச் செயலாளர் அவர்களே வருக, வாழ்க, வெல்க, என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுகவை சேர்ந்த எம்ஜிஆர் மன்ற மாநகர மாவட்ட இணைச் செயலாளர் திரு சுப்ரமணிய ராஜா கூறுகையில், தங்களுக்கு எப்போதுமே சின்னம்மா தான் பொதுச்செயலாளர் என்றும் திமுகவை எதிர்க்க அவரால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார். இதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக ஒன்றினையும் என தெரிகின்றது.