Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரின் அலட்சியத்தால்… “குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்”… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

பெற்றோரின் அலட்சியத்தால் 3 வயதுடைய மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், இலங்கியனுர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராம்குமார் மணிமேகலை தம்பதியினர். இவர்களுக்கு மூன்றரை வயதில் விக்னேஷ் மற்றும் சர்வேஷ் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதேபோன்று மணிமேகலையின் சகோதரி மல்லிகா 3 வயதில் விவேகன் என்ற மகன் இருந்துள்ளார். மல்லிகா திருப்பெயர் கிராமத்தில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு தனது இரு குழந்தைகளுடன் மணிமேகலை வந்திருந்தார்.

வழக்கம்போல் மூன்று சிறுவர்களும் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது வீட்டு வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த மல்லிகா மற்றும் மணிமேகலை வீட்டிற்கு வெளியே வாசலில் விளையாடும் வழி கூறியுள்ளார். அதனால் வீட்டிற்கு வெளியே வந்து வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சில நிமிடங்களில் காணவில்லை. சிறுவர்கள் அருகில் இருந்து தனது பாட்டி வீட்டிற்கு சென்று விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்று பெற்றோர்கள் கருதியுள்ளனர். வெகுநேரமாகியும் சிறுவர்கள் வீட்டிற்கு வராததால் பாட்டியிடம் விசாரித்த பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மூன்று சிறுவர்களும் காணவில்லை என தெரியவந்தது. நீண்ட நேரம் ஆகியும் சிறுவர்கள் குறித்து தகவல் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு பாட்டி வீட்டிற்கு சில மீட்டர் தூரத்தில் இருந்த குளம் தென்பட்டது. குளத்தின் கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் அதில் சிறுவர்களின் கால் தடத்தை கண்டனர். விளையாட சென்ற சிறுவர்கள் குளத்தில் சரிந்து விழுந்து இருக்கக்கூடும் என சந்தேகித்த போலீசார் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.

இரவு 9 மணி அளவில் குளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.அதற்குள் தகவல் அறிந்து அங்கு வந்த சப்-கலெக்டர் மற்றும் சிறுவர்களை தேடும் பணியை துரிதப்படுத்தினர். மூன்று மணி நேர தேடுதலுக்கு பிறகு நள்ளிரவு 12 மணியளவில் விக்னேஷ் மற்றும் சர்வேஷ் உடல் சடலமாக மீட்கப்பட்டது. மற்றொரு குழந்தையின் உடல் கிடைக்காத பட்சத்தில் 2 மணி வரை தேடுதல் பணி தொடர்ந்தது.

மீதமுள்ள ஒரு குழந்தையை மீட்க கடலூரில் இருந்து மீட்புக் குழு வரவழைக்கப்பட்டது. 7:00 மணி அளவில் குளத்தில் இறங்க மீட்புக்குழுவினர் தயாராகி இருந்த வேளையில் குளக்கரையில் மற்றொரு குழந்தையின் உடல் மிதந்தது. உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெற்றோரின் அலட்சியத்தால் ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள் உயிர் பலி கொடுக்கப்பட்டது. இனியாவது ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |