பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது குறித்த ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2016 ஆம் வருடத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட போது இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான 100, 500, 1000 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மேலும் அவருக்கு அவற்றுக்கு மாற்றாக புதிய 2000 நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மேலும் பண புழக்கத்தினை அதிகரிப்பதற்காக புதிய வடிவிலான 100, 200, 50, 10 நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த நோட்டுகள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், “பழைய100 ரூபாய் நோட்டுகளை இந்த ஆண்டு முதல் செல்லாது என்று தவறாக வதந்தி பரப்புவதாகவும், ஏற்கனவே கடந்த 2016ம் வருடத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து மக்கள் ஏடிஎம்களில் நின்று அவதிப்பட்டதை நினைவுகூறும் விதமாக இந்த வதந்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவியுள்ளது. எனவே ஆதாரமற்ற செய்திகளை நம்பவேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.