இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்கு கொரோனா என்ற கொடிய நோய் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த கொடிய நோய் 4, 5 வருடங்களுக்கு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது போன்ற நெறிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா என்ற கொடிய நோயை நாம் உலகை ஆட்டிப் படைத்து வருகின்றது. தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும் அது அழிந்த பாடில்லை.
இந்நிலையில் இன்னும் 4, 5 வருடங்களுக்கு இந்தக் கொடிய நோய் இருக்கும் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் ஒரு மாநாட்டில் பேசிய போது ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த கொள்ளை நோயை கட்டுப்படுத்தப்படும். ஆனால் அதற்கு நான்கு ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்று கூறியுள்ளார். மாஸ்க் போடுவது, கூட்டங்களை தவிர்ப்பது, சமூக நெறிமுறைகளை கடைபிடிப்பது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
ஒட்டு மொத்த உலகத்துக்கும் வேகமாக தடுப்பூசி போடுவது அவ்வளவு எளிதல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் இடையில் பல சிக்கல்கள், இடையூறுகள் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.