10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு கடந்த 19ஆம் தேதி 10 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதே போல இந்த வருடமும்பொதுத்தேர்வு ரத்து செய்யபடுமா? என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய முறையில் தேர்வுகள் இருக்கும். பொதுத்தேர்வில் கொண்டு வரும் மாற்றங்கள் குறித்து முதல்வரின் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பாடத் திட்டங்கள் ஏற்கனவே ககுறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது எளிமையான முறையில் பொதுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.