இந்தியாவில் எச்டிஎஃப்சி வங்கி வாட்ஸ்அப் சேவையை திடீரென நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப் செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் பயனாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனிநபர் பாதுகாப்பு தொடர்பாக வாட்ஸ்அப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதனால் வாட்ஸ் அப் செயலியில் இருந்து மாற்று செயலிக்கு பயனாளர்கள் அனைவரும் மாறி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவில் பல வங்கிகள் தங்கள் அக்கவுண்ட் சேவை, வாடிக்கையாளர் சேவை உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப் மூலம் வழங்கி வருகின்றன. தற்போது தனிநபர் பாதுகாப்பு தொடர்பாக வாட்ஸ் அப்பில் சர்ச்சை எழுந்துள்ளதால், எச்டிஎஃப்சி வங்கி வாட்ஸ்அப் சேவையை திடீரென்று நிறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் வாட்ஸ்அப் சேவையை நிறுத்த ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த திடீர் அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.