Categories
கல்வி மாநில செய்திகள்

பாடப் புத்தகங்களில் எழுத்து பிழைகளுடன் அச்சிடப்பட்ட தேசிய கீதம்…!!

இவ்வாண்டு அச்சடித்து வழங்கப்பட்டுள்ள ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் எழுத்துப் பிழைகளுடன் தவறாக அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு  மற்றும் இந்த ஆண்டு முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்று மட்டும் இரண்டாம்வகுப்பு பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள தேசிய கீதமான ஜன கண மன என கீதையில் உள்ள பல வார்த்தைகள் தவறாக அச்சிடப்பட்டுள்ளன.

திராவிட உத்கல வங்கா என்ற வரியில் வங்கா என்தற்கு பதில் பங்கா என அச்சிடப்பட்டுள்ளது. அதேபோன்று உச்சல ஜலதி தரங்கா என்ற வரியில் ஜலதி என்பதற்கு பதில் சலதி என தவறாக அச்சிடப்பட்டுள்ளது. மேலும் ஜன கண மங்கள தாயக ஜெயகே என்ற வரிக்குப் பதில் பாடலின் முதல் வரியான ஜன கண மன அதிநாயக ஜய ஹே என்பதே இடம் பெற்றுள்ளது.

Categories

Tech |