Categories
தேசிய செய்திகள்

20நாள் ஆன குழந்தையை கூட கொஞ்சல…! என்ன விட்டுட்டு ஒரேடியா போய்டாரே… தமிழர்களின் நெஞ்சை உலுக்கிய சோகம் …!!

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இலங்கை தமிழர் பிறந்து 20 நாட்களே ஆன தன் குழந்தையை தூக்கி கூட கொஞ்சாமல் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் மண்டபம் முகாமை சேர்ந்த சாம்சன் டார்வின், உச்சிப்புளி வட்டார பகுதியை சேர்ந்த நாகராஜன், தாத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து புறப்பட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் இவர்கள் வீடு திரும்பவில்லை. இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. அதன்பின் மாயமான மீன் பிடிக்க சென்றவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இறந்தவரின் ஒருவரான சாம்சங் டார்வின் இலங்கை தமிழர் ஆவார். அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்துள்ளார். அதன்பின் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாமில் அவரும் தங்கி வசித்து வந்தார். அங்கு விஜயலட்சுமி என்பவருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் டார்வின்-விஜயலட்சுமி தம்பதிக்கு 20 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தையை கொஞ்ச முடியாமல் டார்வின் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தாருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |