ஆசிரியர்கள் ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த சம்பவம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டியை சார்ந்த பொதுமக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்களின் குறைகளை தீர்பதற்காக புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டு செல்வது உண்டு. அதிலிருந்த ஒரு மனுவில் கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பகுதியிலுள்ள 15 திற்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டு நடத்தி வரும் ஆசிரியர்களிடம் சேர்ந்து மாதந்தோறும் பணத்தை செலுத்தி வந்துள்ளனர்.
அவர்களிடம் 47 லட்சம் வரை பணம் செலுத்தியும் ஏலம் எடுத்தவர்களுக்கு இன்னும் பணத்தை கொடுக்காமல் ஆசிரியர்கள் ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.