கொள்ளையர்களால் நகைக்கடைக்காரரின் மனைவி மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியில் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் தன்ராஜ். இவர் ரயில்வே ரோடு பகுதியில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் தாய் மற்றும் மகனை கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் இந்த கொள்ளையர்கள் தீரன் பட பாணியில் தன்ராஜின் மனைவி மற்றும் மகனை கொடூரமாக கொன்றுள்ளனர்.
பின்னர் வீட்டிலிருந்த 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து இந்த கொள்ளையர்களை தமிழக தனிப்படை போலீசார் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த என்கவுண்டரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.