சசிகலா எப்போது சென்னை வருகிறார் என்பது குறித்து டிடிவி தினகரன் பதிலளித்தார் .
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா இன்று காலை சரியாக 11 மணிக்கு விடுதலையானார். இவர் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தற்போது இவரது உடல்நலம் சீராகவுள்ளதாகவும், செயற்கை சுவாசக் கருவிகள் நீக்கப்பட்டு தாமாக சுவாசித்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து இவர் எப்போது சென்னை வருவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ள டிடிவி தினகரன், மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின்னர் சசிகலா தமிழகம் வரும் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அவரது விடுதலையைத் தான் சென்னை மெரினாவில் கொண்டாடி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.