ஆடையணிந்த பெண்ணை தொடுதல் பாலியல் குற்றம் ஆகாது என்ற மும்பை ஐகோர்ட்டுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
ஆடையணிந்த பெண்ணை தொடுதல், தடவுதல் போன்றவை பாலியல் குற்றம் கிடையாது என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. பாலியல் ரீதியாக ஒரு பெண்ணை துன்புறுத்த நினைக்கும் ஒரு ஆண் எதிர்பாலினத்தவரை ஆடை இல்லாத நிலையில் தோலுடன் தோல் தொட்டு தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறையாக கருதப்படும் கருதப்படும்.
இவ்வாறு மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முறையீட்டை வழக்காக தாக்கல் செய்ய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.