விஜய் மக்கள் இயக்கம் மீது விஜய்யின் தந்தை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்களின் பெயரில் அவர்களுடைய ரசிகர்கள் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்து. அதற்கென்று ஒரு செயலாளர், பொருளாளர் என்று ஒரு இயக்கம் இருக்கும். அந்த இயக்கத்தின் மூலமாக நடிகர்கள் மக்களுக்கு சேவை செய்திட தேவையான உதவிகளை செய்வார்கள். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் திரைப்படங்களின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் புகார் அளித்துள்ளார்.
100 ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்று ஒரு வருடத்திற்கு தேவையான பணத்தை சம்பாதிப்பதாகவும், விஜய் மக்கள் இயக்கம் மக்களுக்கு சேவை செய்யாமல் வியாபாரம் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.