Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்மா ஆட்சியை மீட்போம்” சசி., தனது ஆதரவாளர்களை சந்திப்பார் – டிடிவி பேட்டி…!!

சசிகலா தனது ஆதரவாளர்களை பெருந்தொற்று காலத்திலும் சந்திப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலை அதிமுக கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, “அதிமுகவை மீட்டெடுத்து உண்மையான அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கு தொடர்ந்து  முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்தார். தற்போது கொரோனா பரவலாக இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி சசிகலா தனது ஆதரவாளர்களை சந்திப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |