Categories
லைப் ஸ்டைல்

ரயில் பெட்டிகளில்…. “மஞ்சள், வெள்ளை நிற கோடுகள்” இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?

ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே இருக்கும். அதுபோன்று ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் என்று இதில் தெரிந்துகொள்வோம்.

ஏப்ரல் 16, 1853 அன்று ரயில்வே தனது சேவைகளை தொடங்கி முதல் ரயில் மும்பையில் இருந்து தானே வரை 33 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்தது, ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இந்திய ரயில்வே பயணிகளின் போக்குவரத்தில் பெரும் பங்களிப்பை பெற்றது. 1951 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய நெட்வொர்க் இந்திய ரயில்வே.

பொதுவாக ரயில் பயணிகளுக்கு ரயில் செய்து கொடுக்கப்பட்டு இருக்கும் சிறு சிறு விஷயங்கள் அவரது கவனத்திற்கு வராமலேயே இருக்கின்றது, அதில் ஒன்றுதான் ரயில் பெட்டிகளின் ஜன்னல்களின் மேல் இருக்கும் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள். இந்தியாவில் இயக்கப்படும் அதிவிரைவு வண்டி நீல நிறத்தில் இருக்கும்.

நீல நிற ரயில் பெட்டிகளின் ஜன்னல்களின் மீது வெள்ளை கோடு இருந்தால் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் என்று அர்த்தம், மஞ்சள் நிற கோடு இருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என்று அர்த்தம். பச்சை நிறம் மற்றும் கிரே நிறத்தில் கோடுகள் இருந்தால் அது மகளிருக்கான சிறப்பு பெட்டிகள். ரயிலில் பயணிக்கும் பயணிகள் வசதிக்காக ரயில்வே இதுபோன்ற அடையாளங்களை ரயில் பெட்டிகளில் பயன்படுத்துகின்றனர்.

Categories

Tech |