இந்தியாவில் 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்வதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் டிக் டாக், விசேட், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த செயலிகள் பயனாளர்களின் தகவல்களை எவ்வாறு சேகரிக்கின்றன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆனால் அந்த கேள்விக்கு அந்த நிறுவனங்கள் வழங்கிய பதில்கள் திருப்தி இல்லை என்பதால் நிரந்தர தடை விதிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.