Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்போதும் சசிகலாவுக்கு…. என்னுடைய ஆதரவு உண்டு – விஜயகாந்த் பிரேமலதா…!!

சசிகலாவுக்கு தான் எப்போதும் ஆதரவு தருவதாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலை அதிமுக கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஒரு சில அரசியல் கட்சியினர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தான் ஒரு பெண்ணாக எப்போதும் சசிகலாவுக்கு ஆதரவு தருவதாகவும், சசிகலா அரசியலுக்கு வர வேண்டும், அது தவறில்லை” என்றும் கூறியுள்ளார். மேலும் எடப்பாடிபழனிசாமி மக்களால் முதலமைச்சர் ஆகவில்லை. அதிமுகவினரால் மட்டுமே முதல்வராக இருப்பவர் அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |