டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியரசு தின விழா அன்று பேரணி முடிந்த பின்பு விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகள் அதற்கு முன்பாகவே டிராக்டர்களை கொண்டு வந்து டெல்லியினுள் நுழைந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் விவசாயிகளை வெளியேற்றும் நோக்கில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு துப்பாக்கிசூடு நடத்தினர்.
#WATCH: Security personnel resort to lathicharge to push back the protesting farmers, in Nangloi area of Delhi. Tear gas shells also used.#FarmLaws pic.twitter.com/3gNjRvMq61
— ANI (@ANI) January 26, 2021
இதனால் ஏற்பட்ட கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அவரின் உடலை மற்ற விவசாயிகள் ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் காவலர்களின் புகை குண்டு வீச்சிற்கு பிறகு விவசாயிகளின் போராட்டம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டுள்ளது. எனினும் அந்த கலவரத்தில் இறந்த விவசாயியை துப்பாக்கி சூட்டினால் இறந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக டெல்லியின் காவல்துறை அதிகாரி ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
#WATCH | Protesters vandalise a Delhi Police vehicle beating it with sticks, during yesterday's episode of violence (26.1.2021)
Video clip source(Delhi Police) pic.twitter.com/3KFYUOnwYo
— ANI (@ANI) January 27, 2021
அதில் அவர் கூறியுள்ளதாவது, டிராக்டர் பேரணி நடத்துவதற்காக விவசாயிகளுக்கு அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்ல வேண்டுகோள் வைத்திருந்தோம். ஆனால் சில விவசாயிகள் அதனை மீறி காவல்துறையினரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
மேலும் காவல்துறையினரையும் தாக்கினர். மேலும் விவசாய சங்கங்களுக்கு அமைதியை நிலை நாட்டுவதற்கு உதவுங்கள் என்று வேண்டுகோளும் வைத்திருந்தோம். எனினும் குடியரசு தினத்தன்று நடத்தப்பட்டது “அமைதியான எதிர்ப்பு போராட்டம் இல்லை” என்று தெரிவித்துள்ளார். அதே போல இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் காலிஸ்தான் அமைப்பினர் ஆதரவு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
United States: Khalistan supporters held a protest outside the Indian embassy in Washington DC in support of protest against farm laws in India. pic.twitter.com/tFFd1391pW
— ANI (@ANI) January 27, 2021