தனது ஆதரவாளர்களை சசிகலா கட்டாயம் சந்திப்பார் என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலை தமிழகத்தில் அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அதிமுகவை மீட்டெடுத்து உண்மையான அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று இருந்தாலும் மருத்துவ விதிகளை பின்பற்றி சசிகலா தனது ஆதரவாளர்களை சந்திப்பார் என அவர் கூறியுள்ளார்.