Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”….? தீவிர விசாரணை..!!

சென்னை வியாசர்பாடியில் உள்ள காப்பகத்தில் இருந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுப்பப்பட்டது இதனடிப்படையில் காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளன.

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 26வது பிளாக்கில் தனியார் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் சிறுமிகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் இயக்குனராக கல்யாண சுந்தரம் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த காப்பகத்தில் 18-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி இரவு சிறுவர் ஹெல்ப்லைன் எண் 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு சிறுமி ஒருவர் போன் செய்து காப்பகத்தில் பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்தார்.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் எதிரான குற்றப்பிரிவு துணை கமிஷனர் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காப்பாற்றிய பதினெட்டு சிறுமிகளை மீட்டனர். இதையடுத்து அவர்களை சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து சிறுமிகள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டார்களா, சிறுமிகளுக்கு அந்த இடத்தில் எந்த மாதிரியான துன்புறுத்தல்கள் இருந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |