சசிகலா பற்றி தேமுதிக ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்து அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில் பழனிசாமி மக்களால் முதல்வர் ஆகவில்லை, அதிமுகவினரால் முதல்வராக தேர்வானார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணாக சசிகலாவிற்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. ஜெயலலிதாவுடன் இருந்து அனைத்தையும் செய்த சசிகலா அரசியலுக்கு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து மூலமா திமுகவுக்கு குட்பை சொல்லி, அமமுகவில் இணைய தேமுதிக திட்டமிட்டுள்ளதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.