உலகம் முழுவதிலும் ஒரு ஆண்டுக்கு 12 மனிதர்கள் சுறா மீன்களால் தாக்கப்பட்டு உயிர் இழப்பதாக தெரியவந்துள்ளது.
உலகில் பல்வேறு வகையான மீன்கள் உள்ளன. அதில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சில மீன்கள் இருக்கின்றன. சுறா என்று அழைக்கப்படும் சுறாமீன் வேகமாக நீந்த வல்ல பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். இவை கூர்மையான பல பொருள்களைக் கொண்டுள்ளன. 22 சென்டிமீட்டர் நீளமுள்ள பிக்மி சுறா முதல் வரண்டு மீட்டர் நீளமுள்ள திமிங்கல சுறா வரை சுறாக்களில் பல சிற்றினங்கள் உள்ளன. சுறா மீனின் உடல் உறுப்பு வளையக்கூடிய குறுந்த எலும்பால் ஆனது.
அதுமட்டுமன்றி சுறாக்கள் மிகச் சிறந்த மோப்பத் திறன் கொண்டவை. 10 லட்சம் துளிகளில் ஒரு துளி ரத்தம் இருந்தாலும் இவற்றால் கால் மைல் தொலைவில் இருந்து கூட இருந்துவிட முடியும். இவ்வாறான திறன்களைக் கொண்ட சுறா மீன்கள் தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு ஆண்டுக்கு உலகம் முழுவதிலும் சராசரியாக 12 மனிதர்கள் சுறா மீன்களால் தாக்கப்பட்டு உயிர் இழக்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 11,417 சுறா மீன்கள் மனிதர்களால் கொல்லப்படுகின்றன எனவும் அந்த ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.