Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஷாலை தொடர்ந்து ஆளுநரை சந்திக்கும் பாக்யராஜ் அணியினர்…..!!

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷால் ஆளுநரை சந்தித்த நிலையில் பாக்யராஜ் , ஐசரி கணேஷ் அணியினரும் தமிழக ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. அடுத்தடுத்து ஏற்பட குழப்பங்களால் தேர்தல் நடத்த தடை விதித்து தென் சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.

Image result for பாக்யராஜ் , ஐசரி கணேஷ்

இதையடுத்து நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து  பேச பாக்யராஜ் , ஐசரி கணேஷ் அணியினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகின்றது.ஏற்கனவே நேற்று நடிகர் தேர்தல் தொடர்பாக நடிகர் விஷால் ஆளுநரை சந்தித்து மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |