Categories
உலக செய்திகள்

இரவில் தனியாக சென்ற காதல் ஜோடி… கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்… வெளியான சிசிடிவி புகைப்படம்….!!

லண்டனில் தனியாக சென்ற காதல் ஜோடியை தாக்கிய  4 பேரில் மூவரின்  புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். 

தெற்கு லண்டனில் இரவு 10 மணிக்கு மேல் ஆண் ஒருவர் தனது காதலியுடன் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு அருகே வந்த நான்கு நபர்கள் அந்த காதல் ஜோடியை மிரட்டியுள்ளனர் . பின்னர் அந்த ஆணின் முகத்தில் கடுமையாக தாக்கி அவரை நிலைகுலைய வைத்துள்ளனர். இதைப் பார்த்து பதறிய காதலி தனது காதலனை தாக்குதலிலிருந்து காப்பாற்ற முயன்றுள்ளார் . அப்போது 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டுள்ளனர்.

அதற்கு பிறகு மீண்டும் அந்த ஆணின் தலையில் பலமாக அடித்து விட்டு நான்கு பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் அந்த ஆணிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கொடூர தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரில் மூவரின் சிசிடிவி புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த மூன்று பேர் குறித்து பொதுமக்கள் யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களிடம் வந்து தெரிவிக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |