நண்பருக்கு வாங்கி கொடுத்த கடனை சம்பந்தப்பட்ட நிறுவனம் திரும்பி கேட்டதால் சிற்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தாழையூர் பகுதியில் அத்தியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிற்பக் கலைக்கூடத்தில் சிற்பியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பருக்கு ஒரு பைனான்ஸ் நிறுவனத்திடம் அத்தியப்பன் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால் அவரது நண்பர் அந்த கடனை திருப்பி செலுத்தாததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இவரிடம் அந்த கடனை திரும்பக் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த ஆத்தியப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.