Categories
உலக செய்திகள்

திடீரென்று வெடித்து சிதறிய எரிமலை…. ஆறாக ஓடிய நெருப்பு குழம்பு…. அலறியடித்து ஓடிய மக்கள்…!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து நெருப்பு ஆறாக ஓடியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா நாட்டில் மிக ஆக்டிவ் எரிமலையான மௌன்ட் மெராபி இன்று வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த எரிமலை புகையை கக்கியதால் 1500 மீட்டருக்கு நெருப்பு குழம்பு ஆறாக ஓடுகிறது. இதனால் புகை முழுவதும் மேகம் போல் பரவி உள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சாம்பல், புகை, கடுமையான பாறைகள் ஆகியவற்றை ஏரிமலை வெளியே தள்ளியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு இதற்கு முன் 2010 ஆம் வருடத்தில் வெடித்துள்ளது.

அப்போது 340 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த எரிமலை வெடித்து சாம்பலும், புகையும் கக்கியதால் அந்த பகுதியில் வசித்த மக்கள் தங்களுடைய பாதுகாப்பு கருதி வேறு பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனர். இதையடுத்து எரிமலை வெடிப்பு நின்றபிறகு வெளியேறிய மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பிய நிலையில் மீண்டும் வெடித்து நெருப்பை கக்கி வருகிறது.

இதையடுத்து எரிமலை இருக்கும் இடத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் வட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த எரிமலை வெடிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதையடுத்து கிராம வாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல உள்ளூர் நிர்வாகம் வாகனங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

Categories

Tech |