இலங்கையில் புதுவகை கொரோனா வேகமாக பரவுவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனில் உருவாக்கிய கொரோனா பரவியது. தற்போது இந்த புதிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது இந்த புதிய வகை கொரோனா இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது வேகமாக பரவக்கூடியது என்று மருத்துவத் துறை அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய வகை வைரஸ் குறித்து மக்களுக்கு அறிவிக்க சுகாதார துறை தாமதித்து விட்டதாகவும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “புதிய வகை ககொரோனா தொடர்பில் சில நாட்களுக்கு முன்பு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிவித்திருந்தது. இருந்தபோதிலும் இது தொடர்பில் சுகாதாரதுறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை குழுவினரால் நேற்று இது தொடர்பாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இவ்வாறு கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த விஷயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.