இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அத்திப்பலகானூரில் மணிமலை என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டத்தில் வசித்து வரும் சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக இந்த தம்பதிகள் இருவரும் முத்து காளிப்பட்டி எஸ்.ஆர்.வி கார்டன் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிமலை குஜராத் சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்த சௌமியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ராசிபுரம் போலீசார் சௌமியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.