நடிகர் விவேக் முதல்வர் சந்தித்தற்கான காரணம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமியை நடிகர் விவேக் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். பின்னர் விவேக் அவருடைய டுவிட்டர் பக்கத்தில், அரசியலுக்காக்கவோ அல்லது என் சொந்த காரணமாகவோ முதல்வர் அவர்களை நான் பார்க்கவில்லை.
தமிழ் துறவி “அருட்பா” தந்த வள்ளலார் (1823-1874) தன் வாழ்நாளில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடை அம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை “வள்ளலார் நெடுஞ்சாலை” என பெயர் சூட்ட மனு அளித்தேன். இதை முதல்வர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். இதுகுறித்து நல்ல செய்தி வரலாம் என்று தெரிவித்துள்ளார்.