ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனந்தகமல நகரில் மோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவர் அச்சரப்பாக்கத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பிய மோகன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் ரூபாயும், 15 பவுன் தங்க நகைகள், மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மோகன் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.