புற்றுநோய் பாதிக்கப்பட்ட மகளுக்காக தாய் மொட்டை அடித்துக்கொண்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
புற்றுநோய் பாதித்தவர்களுக்கு கீமோதெரபி கதிர்வீச்சு போன்ற கடும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர்களது உடல் முழுவதும் முடி கொட்டும் நிலை ஏற்படும். எனவே அவர்கள் தலையை மொட்டையடிப்பார்கள். இது புற்று நோய் பாதித்தவர்களுக்கு, நோயின் தாக்கத்தை விட பல மடங்கு துன்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறான சூழலில் அவர்களின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தான் ஆதரவளித்து ஊக்கம் அளிப்பர்.
இந்நிலையில் தற்போது புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்குமே தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தன் மகளுக்கு மொட்டை அடிக்கிறார்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தன் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தானும் மொட்டை அடித்துள்ளார். இதனை கண்ட அந்த பெண் கண் கலங்கும் காட்சிகள் வீடியோவை காண்பவர்களை மனம் உருகச் செய்துள்ளது. மேலும் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
https://twitter.com/GoodNewsCorres1/status/1353926076947431424