குளத்தில் தவறி விழுந்து இரட்டைக் குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள இலங்கியனூர் கிராமத்தில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நான்கு வயதில் விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருப்பெயர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு மணிமேகலை தனது குழந்தைகளுடன் சென்றுள்ளார். அதன்பின் மணிமேகலையை பார்ப்பதற்காக அதே கிராமத்தில் வசித்து வரும் அவரது சகோதரி மல்லிகா தனது நான்கு வயது மகன் விவேகனுடன் சென்றுள்ளார். இந்நிலையில் அங்குள்ள குளத்திற்கு சென்ற அனைவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது விளையாடி கொண்டிருந்த விவேகன், விக்னேஸ்வரன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகிய மூன்று சிறுவர்களும் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 சிறுவர்களின் உடலையும் மீட்டு மீட்டனர். ஒரே நேரத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.