உலகின் பணக்கார நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டை தென்னாப்பிரிக்க அதிபர் கூறியுள்ளார்.
உலகப் பொருளாதார கூட்டமைப்பு மெய்நிகர் மாநாடு தேவோசில் நடைபெற்றது. அதில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா, உலகின் பணக்கார நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்து கொள்கிறது என்று ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.
“பணக்கார நாடுகள், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் நாடுகள் போன்றவை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிக அளவு தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு தெரியாமல் வாங்கி பதுக்கி வைத்துக் கொள்கின்றது.
சில பணக்கார நாடுகள், அந்த நாட்டில் வசிக்கின்ற மக்களை விடவும் நான்கு மடங்கு அதிகமாக வாங்கி வைத்துக் கொள்கின்றனர். அதாவது 4 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு 12 கோடி டோஸ் அல்லது 16 கோடி டோஸ்களை வாங்கி வருகிறது அது எதற்காக? . எனவே கண்டிப்பாக கூடுதலாக பதுக்கி வைக்கப்பட்ட தடுப்பூசிகளை வெளியே கொண்டுவர வேண்டும்.
சில நாடுகள் தங்கள் மக்களுக்காக பெறுவதாக கூறுகிறது. ஆனால் நாங்கள் எங்கு செல்வது? எங்கள் நாட்டு மக்கள் மனிதர்களே இல்லையா? எங்களுக்கு பாதுகாப்பே கிடையாதா? உலகின் பணக்கார நாடுகள் எப்படி தடுப்பூசிகளை வாங்கி பதுக்கிக் கொண்டது என்பதை நாங்கள் நன்றாக அறிந்துள்ளோம்.
அதனால்தான் நாங்கள் ஆப்பிரிக்காவில் தடுப்பூசி குழு ஒன்றை நியமித்தோம். இந்த முயற்சியில் நாங்கள் வெற்றியும் கண்டுள்ளோம். ஆனால் தடுப்பூசிகளை பதுக்கியவர்கள் அதனை வெளியே கொண்டு வர வேண்டும். அப்போதுதான் உலகின் மற்ற ஏழை நாடுகள் தடுப்பூசியால் பயனடைய முடியும்.கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் அனைத்தும் சமமாக பயனடைய வேண்டும். சில நாடுகள் இதில் முன்னுரிமை பெற்றுக்கொண்டு தடுப்பூசிகளை பதுக்குவது நல்லதல்ல” என்று அவர் கூறியுள்ளார்.