நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அமலில் உள்ள தளங்களுடன் பொது முடக்கத்தை அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீதம் கூடுதலாக பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
திரையரங்குகளில் கூடுதல் இருக்கைகளுடன் இயங்குவது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.