Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்… கதறிய குடும்பத்தினர்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மனைவி மற்றும் மகள் வீட்டில் இல்லாத சமயத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மடத்துகுப்பம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் தெருவில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வனிதா, பச்சையம்மாள் என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்து துரைராஜ் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவருக்கு வயிற்றுவலி குணமடையவில்லை. இந்நிலையில் துரைராஜன் மனைவி மற்றும் அவரது இரு மகள்கள் காஞ்சிபுரத்தில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மஞ்சுளாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மஞ்சுளா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, துரைராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது உடல் அழுகி துர்நாற்றம் வீசியுள்ளது. இச்சம்பவம் குறித்து கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துரைராஜன் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |