காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
டெல்லியில் 9-ஆவது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெறுகின்றது. காவிரி ஒழுங்காற்று குழு_வின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று கடந்த ஜூன் மாதத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கர்நாடகா கடந்த செவ்வாய்க்கிழமை வரை வெறும் 1.7 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டம் நடைபெற்று வருவது முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.