கருணாநிதி நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சிமற்றுயினர் ம் திமுக கட்சியினர் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது அதிமுக தொண்டர்கள் அருகில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். மரியாதை செலுத்திய இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.