Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கவனமா இருக்க கூடாதா… விசேஷ வீட்டிற்கு சென்றவர்… அறியாமல் செய்த தவறு… வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

வாலிபரை மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள பொடியன் ஊரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற ஒரு மகன் உள்ளார். இவர் நெல்லை அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மருதம்புத்தூரில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு கிரகப்பிரவேசத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு உள்ள ஒரு பம்புசெட்டு கிணற்றில் குளித்து முடித்தவுடன் தனது துணிகளை அருகில் உள்ள கம்பியில் காயபோட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மீட்டர் பெட்டியின் மீது ஈரத்துணி பட்டதால் ராஜாவை மின்சாரம் தாக்கி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜாவை உறவினர்கள் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

Categories

Tech |