சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அன்பு நகரில் கமல்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அருகே தனது உறவினர் சிவக்குமார் வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இவருக்கு மோனிஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மோனிஷ் ஒரு ஏரியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதனை பார்த்த மற்ற சிறுவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அச்சிறுவனை மீட்டு உத்தரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோனிஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.