மது விற்றவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் டவுன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குருலிங்கபுரத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதே பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் மற்றும் கருப்பாயி ஆகிய இருவரையும் மது விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்தனர்.
அதோடு அவர்களிடமிருந்த 35 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். இதனை தொடர்ந்து பெரிய கொல்லப்பட்டி விலக்கு அருகே மதுபாட்டில் விற்ற குற்றத்திற்காக அமீர்பாளையத்தில் வசித்து வரும் ராமு என்பவரையும், கண்மாய் சூரங்குடிபகுதியில் மது விற்ற குற்றத்திற்காக மாரியப்பன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர்.