Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் மயமாக்க…. சிபிஎஸ்இ திட்டம்…. வெளியான தகவல்…!!

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பத்தை பரிசீலித்து அங்கீகாரம் அளிக்கும் நடைமுறைகளில் மனித தலையீடு மிகவும் குறைவாகவே இருக்கும். மேலும் ஏற்கனவே இயங்கும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த மார்ச், ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் மூன்று முறை அவகாசம் அளிக்கப்படும். அங்கீகாரத்தை நீடிக்க மார்ச் 1 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில், 24, 930 பள்ளிகள் பதிவு செய்துள்ளன. இதன் விதிமுறைகள் கடந்த 1998-ம் வருடம் முதல் முறையாக உருவாக்கப்பட்டன. பின்னர் 2018-ல் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |