தமிழகத்தில் வருகின்ற 31ஆம் தேதி முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாம் கடந்த 17ஆம் தேதியே நடைபெறவேண்டியது. ஆனால் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி காரணத்தால் இதன் தேதி மாற்றிவைக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி, 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.