ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
வரக்கூடிய பிப்ரவரி 24ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா வருகிறது. இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 24ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உயர்கல்வி மன்றத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிலைக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே பல்வேறு காந்தியடிகள், உவேசா, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் என பல்வேறு தலைவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதே வரிசையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற ஒரு அறிவிப்பை முதல்-அமைச்சர் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.