நேற்று காலை சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் உள்ள நான்கு பேரையும் தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் நகை வியாபாரி மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்டார்கள். பின்னர் அந்த வீட்டில் இருந்த சுமார் 17 கிலோ தங்கம் தங்க நகைகளையும், 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை கொள்ளை அடித்து விட்டு, நகை வியாபாரி காரிலே தப்பி சென்றனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்கள். இவர்கள் ஹிந்தி பேசியதால் வடமாநில கொள்ளையர்கள் என உறுதிப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டையை போலீசார் தீவிர படுத்தினர்.
பின்னர் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற கார் ஒரு கிராமத்தில் இருப்பதாக மக்கள் தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் அந்த பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்ட போது வயல் பகுதியில் இருந்த மூன்று கொள்ளையர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்த நகைகளும் மீட்கப்பட்டது. அந்த மீட்பு பணியின் போது தப்பி ஓட முயற்சி செய்த மணிபால் சிங் குற்றவாளி என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
இதையடுத்து 2 குற்றவாளிகளிடம் வைத்தீஸ்வரர் காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அந்த விசாரணையின் அடிப்படையில் தப்பிச்சென்ற நான்காவது நபர் நேற்று கும்பகோணம் அருகே கைது செய்யப்பட்டார். பிறகு மூன்று பேரிடம் போலீசார் கைது விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்களை நீதிமன்றம் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளிகள் ரமேஷ் மணிஷ் காவல் நிலையங்களில் உள்ள கழிவறையில் வழுக்கி விழுந்து உள்ளார்கள்.இதனால் அவர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்கள். பின்னர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுகின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.