Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீசார்….. தெரியவந்த உண்மை…. அதிரடி நடவடிக்கையில் இருவர் கைது….!!

மது பாட்டில்கள் மற்றும் புகையிலை பொருள்களை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டியில் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஊட்டியை சேர்ந்த இளையராஜா சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் இளையராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 3 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

அதே போன்று மணப்பட்டு கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிக் கடையில் வைத்து விற்ற குற்றத்திற்காக மலையாண்டி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |