Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை…. கதறும் குடும்பத்தினர்….!!

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் 3 பேர் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் காமராஜ் நகர் பகுதியைச் சார்ந்தவர் வெங்கடேசன். கூலி தொழிலாளி வேலை செய்யும் இவர் நேற்று முன்தினம் இரவு வாணியம்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் கனவாய் புதுரை சார்ந்த சிவலிங்கம் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்குட்டை பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

நேதாஜி நகர் என்ற இடத்தில் சென்ற போது இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வெங்கடேசன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சிவலிங்கம் மற்றும் மோகன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காத காரணத்தினால் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |