Categories
தேசிய செய்திகள்

BOY FRIEND இல்லாம வராதீங்க… காலேஜ் போட்ட ரூல்ஸால் அதிர்ந்த பெற்றோர்…!!!

ஆக்ராவில் கல்லூரிக்கு வரும் மாணவிகள் அனைவரும் பாய் பிரண்டோடுதான் வரவேண்டும் என அச்சிடப்பட்ட நோட்டீசால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆக்ராவில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் லேட்டர் பேடில், கல்லூரியின் லோகோ பேராசிரியர் கையெழுத்துடன் கூடிய ஒரு நோட்டீஸ் வலம் வந்து உள்ளது. அதில் வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி கல்லூரியில் பயிலும் மாணவிகள் அனைவரும் பாய் பிரண்டோடுதான் கல்லூரிக்கு வர வேண்டும். இல்லையெனில் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அச்சிடப்பட்டிருந்தது.

இதை கண்டு மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு கல்லூரி நிர்வாகத்திடம் அந்த நோட்டீஸ் பற்றி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு கல்லூரி நிர்வாகம் அது போலியான நோட்டீஸ் என தெரிவித்துள்ளது. அது மட்டுமன்றி அந்த போலியான நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Categories

Tech |